உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மது பாட்டில்களுடன் 2 பேர் பறக்கும் படையிடம் சிக்கினர்

மது பாட்டில்களுடன் 2 பேர் பறக்கும் படையிடம் சிக்கினர்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேரை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்தனர். உளுந்துார்பேட்டை அடுத்த களமருதுார் அருகே தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு கோவிந்தராஜ் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருவெண்ணெய்நல்லுாரில் இருந்து உளுந்துார்பேட்டை நோக்கி வந்த வேகன்ஆர் நிறுத்தி சோதனை செய்தனர்.காரில் 125 மதுபான பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இருவேல்பட்டு ராமநாதன் மகன் பூவரசன், 23; சித்தானங்கூர் ராமலிங்கம் மகன் ரகுபதி, 22; என தெரியவந்தது. இருவரையும் மதுபாட்டில்களுடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை