| ADDED : ஜூன் 01, 2024 06:17 AM
தியாகதுருகம், : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 24 ஆண்டுகளாக மவுண்ட் பார்க் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி சாதனை படைத்து வருவதாக தாளாளர் மணிமாறன் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 24 ஆண்டுகளாக எங்கள் பள்ளி தரமான கல்வியை வழங்கி கிராமப்புற மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கி வருகிறது.தலைசிறந்த ஆசிரியர்கள், மாணவர்களை ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண் எடுக்கும் வகையில் பயிற்றுவிக்கின்றனர். தகுதியுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 250 பேருக்கு விடுதி மற்றும் கல்விக் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.ஆண்டுதோறும் நடைபெறும் ஸ்காலர்ஷிப் தகுதி தேர்வு மூலம் 100 மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்கி வருகிறோம். இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏராளமான மாணவர்கள் பயனடைகின்றனர்.மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த பயம், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றை போக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. திட்டமிட்டு எளிதில் பாடங்களைப் புரிந்து கொள்ளும் வகையில் பயிற்றுவிக்கப்படுவதால் உயர்ந்த மதிப்பெண் எடுப்பதற்கு ஆர்வமுடன் தயாராகின்றனர்.நடந்த முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 497 மதிப்பெண் பெற்று மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர். மாணவி சாய் ஸ்ரீ 497, கமல் ராஜ் 496, காவ்யா 495 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.பிளஸ் ௨ பொதுத் தேர்வில் மாணவி சினேகா 579 மதிப்பெண் பெற்று பெருமை சேர்த்துள்ளார். இரு வகுப்பிலும் சேர்த்து முக்கிய பாடங்களில் 106 மாணவர்கள் சென்டம் எடுத்து சாதனையை படைத்துள்ளனர். மவுண்ட் பார்க் சி.பி.எஸ்.இ., பள்ளி, மவுண்ட் பார்க் ஸ்பெஷல் அகாடமி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.இப்பள்ளியில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் எம்.பி.பி.எஸ்., 3000க்கும் மேற்பட்டோர் இன்ஜினியர்களாக உருவாகியுள்ளனர்.இவ்வாறு தாளாளர் மணிமாறன் கூறினார்.