| ADDED : ஏப் 28, 2024 04:32 AM
கச்சிராயபாளையம், : மாதவச்சேரி கிராமத்தில் தனியார் பள்ளி பஸ் டிரைவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் அடுத்த தாவடிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் கவியரசன், 28; கச்சிராயபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணிபுரிகிறார். கவியரசன் நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் பள்ளி மாணவர்களை இறக்கிவிட்டு பஸ்சை ஓட்டிச் சென்றார்.மாதவச்சேரி பால் சொசைட்டி அருகே சென்றபோது 3 வாலிபர்கள் பஸ்சை வழிமறித்து, டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கினர்.இது குறித்த புகாரின்பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, பால்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் சடையப்பன், 24; மாதவச்சேரி காசிநாதன் மகன் சூர்யா, 25; வடமலை மகன் வல்லரசு, 23; ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.