உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாதவச்சேரியில் 3 பேர் இறப்பு; சமூக வலைதள தகவலால் பரபரப்பு

மாதவச்சேரியில் 3 பேர் இறப்பு; சமூக வலைதள தகவலால் பரபரப்பு

கச்சிராயபாளையம் : மாதவச்சேரியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் இறந்ததாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு நிலவியது.கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி கிராமத்தில் குடிக்கு அடிமையான பழனிமுத்து மகன் ஜெயமுருகன்,45; நேற்று முன்தினம் இரவு 10:00 மணி அளவில் இறந்தார். அவரது உடலை உறவினர்கள் நேற்று காலை அடக்கம் செய்தனர்.இந்நிலையில் நேற்று காலை 9:30 மணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஐயந்துரை மகன் இளையராஜா,33; காலை 11:30 மணிக்கு கண்ணன்,55; அடுத்தடுத்து இறந்தனர்.இவர்கள் கள்ளச்சாராயம் குடித்து இறந்திருக்கலாம் என சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதனை அறிந்த கச்சிராயபாளையம் போலீசார் மாதவச்சேரி கிராமத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்புமாறு அறிவுறுத்தினர்.ஆனால், இறந்தவர்களின் உறவினர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் அதனால் பிரேத பரிசோதனை மற்றும் வழக்கு எதுவும் தேவையில்லை எனக்கூறினர். அதனால், போலீசார் வேறு வழியின்றி அங்கிருந்து திரும்பிச் சென்றனர். கள்ளச்சாராயம் குடித்து ஒரே கிராமத்தை சேர்ந்த 3 நபர்கள் இறந்ததாக செய்தி பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி