உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிகிச்சையில் இருந்த 5 பேர் தப்பியோட்டம் போலீஸ் உதவியுடன் மீண்டும் சேர்ப்பு

சிகிச்சையில் இருந்த 5 பேர் தப்பியோட்டம் போலீஸ் உதவியுடன் மீண்டும் சேர்ப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து பாதித்த 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களில், சேஷசமுத்திரம் சின்னதுரை,42; ராஜா,37; கருணாபுரம் மொட்டையன்,71; சிவா உட்பட 5 பேர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடினர்.உடன் மருத்துவமனை நிர்வாகம், போலீஸ் உதவியுடன் தப்பியோடிய நபர்களின் வீட்டிற்குச் சென்று, மீண்டும் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.விசாரணையில், சிகிச்சை அளிக்கும் முறையை பார்த்து பயந்து ஓடியதாக தெரிவித்தனர்.

உயிரிழப்பு

கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட சேஷாசமுத்திரம் சுப்ரமணியன்,40; கடந்த 19ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்கு பயந்து கடந்த 20ம் தேதி வீட்டிற்கு சென்ற சுப்ரமணியனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் அழைத்தும் மருத்துவமனைக்கு வர மறுத்ததால், உடல் நிலை மோசமாகி நேற்று முன்தினம் இறந்தார். அதனையொட்டி, அவரது உடல்,பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி