உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமியை திருமணம் செய்தவருக்கு பாய்ந்தது போக்சோ வழக்கு

சிறுமியை திருமணம் செய்தவருக்கு பாய்ந்தது போக்சோ வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை திருமணம் செய்து கொண்டவர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த 7ம் தேதி பூச்சி மருந்தை குடித்துள்ளார். உடன் அவரது உறவினர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமிக்கு திருமணமாகி இருந்ததால் மருத்துவமனை நிர்வாகத்தினர் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.விசாரணையில், சிறுமிக்கும் அவரது உறவினர் மலைக்கோட்டாலத்தை சேர்ந்த கருப்பன் மகன் ரமேஷ்,28; என்பவருக்கும் திருமணமாகியதும், ஆடி மாசம் என்பதால் சிறுமி அவரது தாய் வீட்டிற்கு வந்ததும் தெரிந்தது. வீட்டு வேலை செய்யவில்லை எனக்கூறி தாய் கண்டித்ததால் மனமுடைந்த சிறுமி பூச்சி மருந்து குடித்துள்ளார். இதையடுத்து, சமூக நலத்துறை விரிவாக்க நல அலுவலர் சரஸ்வதி அளித்த புகாரின் பேரில், சிறுமியை திருமணம் செய்த ரமேஷ் மற்றும் சிறுமியின் பெற்றோர் மீது போக்சோ சட்டத்தில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்