உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருமண பத்திரிகை கொடுக்க சென்ற வாலிபர் விபத்தில் பலி

திருமண பத்திரிகை கொடுக்க சென்ற வாலிபர் விபத்தில் பலி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே திருமண பத்திரிகையை கொடுக்கச் சென்ற வாலிபர், பைக்கில் இருந்து விழுந்து இறந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் சிவக்குமார், 27; கொத்தனார். இவருக்கு இன்னும் சிலதினங்களில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக உறவினர், நண்பர்களுக்கு திருமண அழைப்பிழை கொடுத்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு 9:45 மணியளவில் திருமண அழைப்பிதழ் கொடுக்க ஹோண்டா பைக்கில் கள்ளக்குறிச்சி - சேலம் சாலையில் உலங்காத்தான் நோக்கிச் சென்றார். அப்போது திடீரென பிரேக் அடித்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.உடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை