உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு அறிவுரை

அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு அறிவுரை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் வேளாண் உற்பத்தியை பெருக்கி அதிக மகசூல் பெற நவீன வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொற்படாக்குறிச்சியில் கம்பு பயிர் விதைப் பண்ணை வயல், மேலுார் கிராமத்தில் எண்ணெய் பனை வயல் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.தொடர்ந்து, மேலுாரில் அரசு மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள காளான் வளர்ப்பு குடில், நிரந்தர மண்புழுக் கூடாரம், பசுந்தாள் உர விதைகள் வயல், வினைதீர்த்தாபுரத்தில் சிப்பம் கட்டும் அறை, இந்திலியில் அத்தி சாகுபடி வயல், தச்சூரில் கரும்பு, மக்காச்சோளம் சாகுபடி வயல்களை ஆய்வு செய்தார்.ஆய்வின்போது, சாகுபடி பரப்பு, திட்ட மதிப்பீடு, மானியத் தொகை ஒதுக்கீடு, உற்பத்தித் திறன் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்தார். விவசாயிகள் வேளாண் உற்பத்தியைப் பெருக்கி அதிக மகசூலை பெறும் வகையில் நவீன வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை