மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
15 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
15 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
18 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
19 hour(s) ago
கள்ளக்குறிச்சி : வண்டல் மண், களிமண் தேவைக்கு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களை செம்மைப்படுத்தவும் மற்றும் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் பயன்பாட்டிற்காக தங்களது பகுதியில் உள்ள நீர்வளத்துறை கட்டுபாட்டில் உள்ள ஏரிகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண்ணை விலையில்லாமல் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான தகுதி வாய்ந்த 318 நீர் நிலைகளின் விவரம், புல எண் மற்றும் அகற்ற முடிவு செய்துள்ள அதிகபட்ச கனிமத்தின் அளவு குறித்து சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம் பெறப்பட்டுள்ளது. அதன்படி, நஞ்சை நிலம் ஒரு ஏக்கருக்கு 75 கனமீட்டர்(25 டிராக்டர் லோடுகள்), புஞ்சை நிலம் ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர்(30 டிராக்டர் லோடுகள்), வீட்டு பயன்பாட்டிற்கு 30 கன மீட்டர்(10 டிராக்டர் லோடுகள்) மண்பாண்டம் தொழில் செய்பவர்களுக்கு 60 கன மீட்டர்(20 டிராக்டர் லோடுகள்) அளவிற்கு எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம். மண்பாண்ட தொழிலாளர்கள் கிராம நிர்வாக அலுவலரது சான்றின் வழியே விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.மேலும், வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலத்தின் விபரங்கள் மற்றும் களிமண் தேவைப்படும் மண்பாண்ட தொழிலாளர்கள் https://www.tnesevai.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.இந்த வாய்ப்பினை விசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
15 hour(s) ago
15 hour(s) ago
18 hour(s) ago
19 hour(s) ago