உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாணவிகளுக்கு பாராட்டு விழா

மாணவிகளுக்கு பாராட்டு விழா

கள்ளக்குறிச்சி : ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் மாவட்ட அளவில் நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஜான்விக்டர் வரவேற்றார். தமிழக அரசின் குடும்ப நலத்திட்டம் சார்பில், உலக மக்கள் தினத்தையொட்டி மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடந்தது. பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், ஆர்.கே.எஸ்., கல்லுாரி சார்பில் பங்கேற்ற முதுகலை மாணவி எபினாமேரி முதலிடத்தையும், சித்ரா மூன்றாமிடத்தையும், இளங்கலை மாணவி நிவேதிகா இரண்டாமிடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளை கல்லுாரி நிர்வாகம் சார்பில் பாராட்டி, பரிசு வழங்கப்பட்டது. துறைத் தலைவர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ