மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
18 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
18 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
21 hour(s) ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் அரசு பஸ்டிரைவரை மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. .கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலையை சேர்ந்தவர்கோவிந்தன்,45; அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று டிஎண்32 என்4743 என்ற பதிவெண் கொண்ட சேலம் - சென்னை செல்லும் அரசு பஸ்சில் பயணிகளுடன் சென்றார். நேற்று மாலை 6.50 மணியளவில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் டயர் காற்றை பரிசோதித்த டிரைவர் கோவிந்தனை, பைக்கில் வந்த மர்ம நபர்கள் சிலர் தாக்கினர்.உடன் அங்கிருந்த சக ஊழியர்கள் தாக்குதலில் ஈடுபட்ட இருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிலர் தப்பிவிட்டனர். இதில் காயமடைந்த டிரைவர் கோவிந்தன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து தகவலறிந்த பஸ் டெப்போ ஊழியர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததையடுத்து டெப்போ ஊழியர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
18 hour(s) ago
18 hour(s) ago
21 hour(s) ago