உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மணலுார்பேட்டையில் நுாலகம் கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை

மணலுார்பேட்டையில் நுாலகம் கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை

திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை பேரூராட்சியில் நுாலகம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.மணலுார்பேட்டை கிளை நுாலகத்திற்கு, 22 லட்சம் ரூபாய் மதிப்பில் நுாலகம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்ததது. கட்டம் கட்டும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது. கிளை நுாலகம் அன்பழகன் வரவேற்றார். பேரூராட்சி தி.மு.க., நகர செயலாளர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலைத்துறை மாவட்ட அறங்காவல் குழு தலைவர் பாலாஜி, அரிமா சங்கம் மாவட்ட தலைவர் அம்மு ரவிச்சந்திரன், வர்த்தகர் சங்க செயலாளர் அன்வர் பாஷா, வாசகர் வட்ட குழு தலைவர் அய்யாக்கண்ணு முன்னிலை வகித்தனர். நுாலகம் துவங்கப்பட்டு கடந்த 60 ஆண்டுகளாக சொந்த கட்டடம் இன்றி வாடகைக் கட்டத்தில் இயங்கி வந்தது. தற்போது கோரிக்கையை ஏற்று நுாலகம் கட்டுமானப் பணி துவங்கியிருப்பது வாசகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ