உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்லுாரியில் ரத்ததான முகாம்

கல்லுாரியில் ரத்ததான முகாம்

சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் ரத்த தான முகாம் நடந்தது. சங்கராபுரம் வட்டம் காட்டுவனஞ்சூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுரியில் நடந்த ரத்த தான முகாமிற்கு கல்லுாரி முதல்வர் சேட்டு தலைமை தாங்கினார். கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பிரியதர்ஷணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சம்பத்குமார்,டாக்டர்கள் விஜயகுமார்,சுகன்யா முன்னிலை வகித்தனர்.முகாமில் கல்லுரி மாணவர்கள் கலந்து கொண்டு 50 யூனிட் ரத்தம் தானமாக வழங்கினர்.முகாமில் சுகாதார ஆய்வாளர் சரவணன்,ஆய்வக நிபுணர் செல்வம்,செவிலியர்கள் ஜெயா,மணிமேகலை மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ