உள்ளூர் செய்திகள்

ரத்த பரிசோதனை முகாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில் ரத்த பரிசோதனை முகாம் நடக்கிறது.கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் டாக்டர் நேரு உத்தரவின் பேரில், நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சியில் கச்சிராயபாளையம் சாலை, துருகம் சாலை, சேலம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தினசரி 1000க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி செய்து வருகின்றனர்.நேற்று, கச்சிராபாளையம் சாலையில் டாக்டர் காந்திமதி தலைமையில், செவிலியர் சதீஷ்குமார், சுகாதார ஆய்வாளர் விக்னேஷ்வரன் ஆகியோர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ