மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
19 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
19 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
22 hour(s) ago
வடலுார், : வடலுாரில் 5 மாத பெண் குழந்தை உடல் சாக்கடையில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுநாவலூரை சேர்ந்தவர் கலியன் மகன் மணிராஜா, 24; ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி,21; திருமணமாகி 4 ஆண்டாகிறது. இவர்களுக்கு ராதிகா,3; லாவண்யா (5 மாதம்) இரு பெண் குழந்தைகள் உண்டு.குடும்ப பிரச்னையில், ராஜேஸ்வரி கோபித்துக் கொண்டு கடந்த 4 மாதமாக வடலுாரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் வடலுார் போலீஸ் நிலையம் வந்த ராஜேஸ்வரி, வடலுார் கடைவீதியில் எனது 5 மாத குழந்தையை கணவர் மணிராஜா பிடுங்கி சென்று விட்டதாகவும், மீட்டு தரவேண்டி புகார் செய்தார்.அவரது பேச்சில் சந்தேகம் கொண்ட போலீசார், அவரை தீவிரமாக விசாரித்தனர். அதில், குழந்தைக்கு காதில் சீழ் வந்தது. அதற்கு சொட்டு மருந்து கொடுத்தபோது குழந்தை இறந்துவிட்டது. பெற்றோருக்கு தெரிந்தால் திட்டுவார்கள் என பயந்து, உடலை சாக்கில் சுற்றி அய்யன் ஏரி அருகே சாக்கடையில் போட்டுவிட்டதாக கூறினார்.நேற்று குழந்தையின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் மணிராஜா ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் வடலுார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
19 hour(s) ago
19 hour(s) ago
22 hour(s) ago