உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / காதலியை தற்கொலைக்கு துாண்டிய காதலன் கைது

காதலியை தற்கொலைக்கு துாண்டிய காதலன் கைது

உளுந்துார்பேட்டை,:' உளுந்துார்பேட்டை அடுத்த ஆர்.ஆர். குப்பத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகள் சிந்தனைசெல்வி, 24; பட்டதாரி. இவர், கடந்த 22ம் தேதி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், சிந்தனைசெல்வி கோவையில் வேலை செய்த போது, அங்கு வேலை செய்த மதுரை அடுத்த பேரையூரை சேர்ந்த முகமது முஸ்தபா மகன் அகமதுஅன்வர்,23; என்பவருடன் காதல் ஏற்பட்டது.இந்நிலையில், சிந்தனைசெல்விக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்ததால், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அகமது அன்வரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், பெற்றோர் சம்மதம் கிடைத்த பிறகு திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அப்போது, சிந்தனைசெல்வி, திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறியதும், கோபமடைந்த அகமதுஅன்வர் செத்துப் போ என கூறியுள்ளார். அதில், மனமுடைந்த சிந்தனைசெல்வி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.அதன்பேரில் எடைக்கல் போலீசார், சிந்தனைசெல்வியை தற்கொலைக்கு துாண்டியதாக அகமது அன்வரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ