உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உண்டியல்களை உடைத்து காணிக்கை பணம் திருட்டு

உண்டியல்களை உடைத்து காணிக்கை பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி, : புதுஉச்சிமேடு அருகே முனியப்பன் கோவிலில் உள்ள 2 உண்டியல்களை உடைத்து காணிக்கை பணம் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேட்டைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் ராயப்பன், 57; இவர், பட்டி கிராமத்தில் உள்ள முனியப்பன் கோவில் பூசாரியாக உள்ளார். கடந்த 2ம் தேதி காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்குச் சென்றார்.அங்கு வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடு போனது தெரியவந்தது.இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து, உண்டிலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ