உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வருண், வஜ்ரா வாகனங்கள் கள்ளக்குறிச்சிக்கு வரவழைப்பு

வருண், வஜ்ரா வாகனங்கள் கள்ளக்குறிச்சிக்கு வரவழைப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 வருண் வாகனங்களும், ஒரு வஜ்ரா வாகனமும் வரவழைக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி, கருணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த பலர் இறந்த நிலையில் மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து அவர்களது உடல்நலன் குறித்து கேட்டறியவும், இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கவும் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கள்ளக்குறிச்சிக்கு வருகின்றனர்.அரசியல் தலைவர்களின் வருகையால் கள்ளக்குறிச்சி பரபரப்பாக உள்ளது. மேலும், பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், கலவரம் ஏற்பட்டால் அதைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வகையில் உள்ள இரண்டு வருண் வாகனங்களும், ஒரு வஜ்ரா வாகனமும் முன்னெச்சரிக்கையாக கள்ளக்குறிச்சிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ