உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஒருவரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

ஒருவரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

கச்சிராயபாளையம்: தெங்கியாநத்தம் கிராமத்தில் ஒருவரை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.கச்சிராயபாளையம் அடுத்த தெங்கியாநத்தம் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தர்மதுரை, 32. இவர் நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் தனது நிலத்திற்கு அருகில் உள்ள பாலத்தில் சாலை பணியாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.அங்கு வந்த அதேப் பகுதியை சேர்ந்த சிவக்குமார், 41, தனது உறவினர்களுடன் சேர்ந்து தர்மதுரையிடம் தகராறு செய்து, அவரை தாக்கினர். இது குறித்த புகாரில் சிவக்குமார், ராகுல், நவீன், தெய்வநாயகம், சகுந்தலா, காந்தி உள்ளிட்ட 6 பேர் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை