| ADDED : மே 26, 2024 06:09 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பெயிண்ட் கடையில் பொருட்களை திருடி சென்றது தொடர்பாக ஊழியர்கள் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் பிரபாகரன்,60; இவர் கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் சாலையில் பெயிண்ட் கடை வைத்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி பிரபாகரன் கடையின் வரவு செலவு கணக்கினை சரிபார்த்த போது, கடையில் உள்ள பொருட்களுக்கும், கணக்கிற்கும் வித்தியாசம் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பிரபாகரன் கடையில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்துள்ளார். அதில் கடையில் 3 வருடங்களாக பணிபுரியும் சம்சுதீன், சமத்பாய் ஆகிய இருவரும் சின்னராசு என்பவரது உதவியுடன் வண்டியில் பொருட்களை எடுத்து சென்றது தெரிந்தது. இது குறித்து பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் 3 பேர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.