உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / எடை மேடை ஊழியரை தாக்கியவர் மீது வழக்கு

எடை மேடை ஊழியரை தாக்கியவர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி, : சின்னசேலம் அருகே முன்விரோதம் காரணமாக எடை மேடை ஊழியரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.சின்னசேலம் அடுத்த வி.பி.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் மகன் கோபி, 28; கனியாமூரில் உள்ள எடை மேடையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 19ம் தேதி வி.பி.அகரத்தைச் சேர்ந்த பெரியண்ணன் மகன் லட்சுமணனுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் லோகநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதை கோபி தனது போனில் போட்டோ எடுத்துள்ளார்.இதைப்பார்த்த லட்சுமணன் எதற்கு போட்டோ எடுக்கிறாய் என கோபியை திட்டினார். இதனால் இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.இந்நிலையில், கடந்த 26ம் தேதி லட்சுமணன், எடை மேடை அருகே இருந்த கோபியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.இது குறித்த புகாரின் பேரில் லட்சுமணன் மீது சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை