உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புறவழிச்சாலையில் பைக் ரேஸ் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு

புறவழிச்சாலையில் பைக் ரேஸ் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு

தியாகதுருகம், : மாடூர் சுங்கச்சாவடி அருகே பைக் ரேஸில் ஈடுபட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.கள்ளக்குறிச்சி அருகே மாடூர் சுங்கச்சாவடி பகுதியில், விலை உயர்ந்த பைக்குகளை வைத்துள்ள இளைஞர்கள் சிலர் 'பைக் ரேஸில்' ஈடுபட்டதாக புகார் எழுந்தது. பைக் ரேஸில் ஈடுபட்டவர்களில் சிலர் கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் தியாகதுருகம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த 6ம் தேதி இரவு பைக் ரேஸில் ஈடுபட்ட தண்டலை கிராமத்தை சேர்ந்த தேவராஜ் மகன் நிஷாந்த்,22; நாகராஜசோழன் மகன் கீதாபாலன்,26; கணேசன் மகன் மகேஷ்,26; விளக்கூரை சேர்ந்த சக்லைன் மகன் சையத் அக்ரம்,22; வடதொரசலுாரை சேர்ந்த தியாகராஜ் மகன் சதீஷ்,19; ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். விபத்தில் காயமடைந்த நிஷாந்த், கீதாபாலன் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், மகேஷ் கோயம்புத்துார் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி