கள்ளக்குறிச்சி: நீலமங்கலம் கிராமத்தில், ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் நடந்த முகாமிற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., பூமா வரவேற்றார். அரசாங்கத்தை தேடி மக்கள் சென்று கோரிக்கை மனுக்களை கொடுப்பதற்கு பதிலாக, மக்களை தேடி அரசாங்கம் வந்து, நேரில் மனுக்களை பெற்று தீர்வு காண்பதற்கான முகாம் நடந்து கொண்டிருக்கிறது. மருத்துவம், கால்நடை, வேளாண்மை, தோட்டக்கலை, வருவாய் உள்ளிட்ட அரசின் 15 துறைகளை சேர்ந்த 55 சேவைகளுக்கு இந்த முகாமில் தீர்வு காணப்படுகிறது.மாவட்டம் முழுவதும் ஊராட்சி பகுதிகளில் நடத்தப்படும் இந்த முகாம்களில் கலந்துகொண்டு, மக்கள் தங்களின் கோரிக்கைகளை அளித்து உடனடி தீர்வுகளை பெற வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் கூறினார். தொடர்ந்து வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மற்றும் கலெக்டர் பிரசாந்த் ஆகியோர் மக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களிடம் வழங்கினர்.முகாமில், கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமி, மாவட்ட சேர்மன் புவனேஷ்வரி பெருமாள், தாசில்தார் கமலக்கண்ணன், வருவாய் ஆய்வாளர் இளையராஜா, தி.மு.க., மாவட்ட அவை தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட நிர்வாகிகள் பெருமாள், காமராஜ், ஊராட்சி தலைவர்கள் நீலமங்கலம் ஜெயசங்கர், நிறைமதி செல்வி பச்சை முத்து, ஒன்றிய கவுன்சிலர் ராதிகா சக்கரபாணி, ஊராட்சி செயலாளர் முத்தையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பி.டி.ஓ., செல்வகணேஷ் நன்றி கூறினார்.