உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுார் தாலுகாவில் ஜமாபந்தி துவக்கம்

திருக்கோவிலுார் தாலுகாவில் ஜமாபந்தி துவக்கம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் தாலுகாவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் ஜமாபந்தி துவங்கியது.ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாய கூட்டம், திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கீதா தலைமையில் நடந்தது. தாசில்தார் மாரியாப்பிள்ளை முன்னிலை வகித்தார். முதல் நாளான நேற்று ஆவிகொளப்பாக்கம் குறுவட்ட கிராம கணக்குகளை ஜமாபந்தி அலுவலர் கீதா ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.வருவாய் ஆய்வாளர்கள் மூர்த்தி, சதீஷ், ஆனந்தசுதன் அனைவரையும் வரவேற்றனர். தலைமை நில அளவையர் தேவகுமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தவமணி, மண்டல துணை வட்டாட்சியர் கங்கா லட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

சங்கராபுரம்

சங்கராபுரத்தில் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி துவங்கியது.வருவாய் தீர்வாய அதிகாரி லுார்துசாமி தலைமை தாங்கினார். தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சத்தியநாராயணன், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் நடராஜன் முன்னிலை வகித்தனர். தலைமையிடத்து துணை தாசில்தார் திருமலை வரவேற்றார்.லுார்துசாமி பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் பட்டா மாற்றம்,முதியோர் உதவித் தொகை,இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொது மக்களிடமிருந்து 75 மனுக்கள் பெறப்பட்டது.முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் தனவேல்,மண்டல துணை தாசில்தார் ராமசாமி,தேர்தல் துணை தாசில்தார் தேவதாஸ், தலைமை நில அளவர் பால் தினகரன்,வருவாய் ஆய்வாளர் கல்யாணி, மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை