உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பேரிடர் மீட்பு செயல் விளக்கம்

பேரிடர் மீட்பு செயல் விளக்கம்

தியாகதுருகம், : தியாகதுருகம் தீயணைப்பு வீரர்கள் பருவ மழையை எதிர்கொள்ளும் ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர்.தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன் தலைமையில் விருகாவூர் அருகே உள்ள கல்குவாரியில் ஒத்திகை பயிற்சி நடந்தது. தென்மேற்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும். திடீரென வெள்ளப் பெருக்கோ அல்லது குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழும் போது மக்களை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர்.இது போன்ற தருணங்களில் பொதுமக்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி