மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
8 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
8 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
11 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
11 hour(s) ago
தியாகதுருகம்: பொது மக்களுக்கு பல்வேறு வகையிலும் இடையூறு ஏற்படுத்தும் டிஜிட்டல் பேனர்களை கட்சியினர் வைக்கக் கூடாது என தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் டிஜிட்டல் பேனர்களை வைக்கக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள தி.மு.க., நிர்வாகிகளும் தொண்டர்களும் தங்களின் குடும்ப சுப நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளிலும் டிஜிட்டல் பேனர்களை வைப்பதை அறவே தவிர்க்க வேண்டும். டிஜிட்டல் பேனர் வைப்பதால் போக்குவரத்து மற்றும் பொது மக்களுக்கு பல்வேறு வகையிலும் இடையூறு ஏற்படுகிறது.தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால் டிஜிட்டல் பேனர் வைப்பதன் காரணமாக விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. கட்சித் தலைமையின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு டிஜிட்டல் பேனர்கள் வைப்பதை கட்சியினர் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
8 hour(s) ago
8 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago