மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
20 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
20 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
22 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
23 hour(s) ago
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் திட்டி, மிரட்டியதால் மனமுடைந்த டிரைவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சின்னசேலம் அடுத்த அம்மையகரத்தை சேர்ந்தவர் சின்னையன் மகன் அலெக்ஸ்பாண்டியன்,36; நெல் அறுவடை இயந்திர டிரைவர். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் குடும்ப செலவிற்காக சின்னசேலம் பகுதியை சேர்ந்த தம்பிதுரை என்பவரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். தொடர்ந்து, பண கஷ்டத்தால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த 4ம் தேதி அதிகாலை 5 மணியளவில், ஹரிஷ்குமார் என்பவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, தம்பிதுரை அழைத்து வரசொன்னதாக தெரிவித்து அலெக்ஸ்பாண்டியனை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளார். தொடர்ந்து, அலெக்ஸ்பாண்டியனை மிரட்டி, திட்டி அனுப்பி உள்ளனர். இதனால் மனமுடைந்த அலெக்ஸ்பாண்டியன் அம்மையகரம் பைபாஸ் சாலை அருகே அரளிகொட்டையை சாப்பிட்டுள்ளார்.இது குறித்து தகவலறிந்த அவரது மனைவி சவிதா சம்பவ இடத்துக்கு சென்று கணவன் அலெக்ஸ்பாண்டியனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். இது குறித்த புகாரின் பேரில், செங்கோடன் மகன் தம்பிதுரை, ஹரிஷ்குமார் ஆகிய இருவர் மீதும் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
22 hour(s) ago
23 hour(s) ago