உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மனைத்தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் செயற்குழு கூட்டம்

மனைத்தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் செயற்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டத்திற்கு, கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் மருதை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் தங்கராஜ் வரவேற்றார். மாநிலத் தலைவர் பொன்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.கூட்டத்தில், மாவட்டத்தில் புதிய நிர்வாகிகளை நியமித்து கூட்டமைப்பினை பலப்படுத்த வேண்டும். வழிப்பாதை, வரைபட அனுமதி ஆகிய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் தேங்கிக்கிடந்த 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் மனைப்பிரிவுகள் விற்பனைக்கு வரத்துவங்கி உள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கும், துறை அமைச்சர் முத்துசாமிக்கும் நன்றி தெரிவிப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நகர தலைவர் துரை, நகர பொருளாளர் ராமச்சந்திரன், மாநில நிர்வாகிகள் நாகராஜ், ஜெகதீசன், மாவட்ட கட்டட தொழிலாளர்கள் சங்கத் தலைவர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட துணைப் பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை