உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இலவச சைக்கிள் பிட்டிங் பணி

இலவச சைக்கிள் பிட்டிங் பணி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதி அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள்கள் பிட்டிங் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.தமிழக அரசு சார்பில் அரசு பள்ளியில் பிளஸ் ௧ படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்க இலவச சைக்கிள்கள் உதிரி பாகங்கள் சில நாட்களுக்கு முன் வந்தது. அவை கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டது.உதிரி பாகங்களை இணைத்து சைக்கிள் பிட்டிங் செய்யும் பணிகளில் வெளிமாநிலத்தை சேர்ந்த பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இப்பள்ளியில் தயாராகும் இலவச சைக்கிள்கள் வாகனங்கள் மூலம், சுற்று வட்டார பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை