உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய முகாமினை, ரோட்டரி சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கி துவக்கினார். ரோட்டரி சங்க துணை ஆளுனர் ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். செயலாளர் சிவக்குமார் வரவேற்றார்.முகாமிற்கு நிதி வழங்கி உதவிய விநாயகா ரெடி மிக்ஸ் உரிமையாளர் உதயகுமார் மற்றும் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட் டனர். கோவை சங்கரா கண் மருத்துவமனை டாக்டர்கள் பூஜா, காவியா தலைமையிலான மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்ற 314 பேருக்கு பரிசோதனை செய்தனர்.அதில், 117 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வாகி கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.முகாம் பணிகளை ரோட்டரி முன்னாள் தலைவர்கள் பெருமாள், சுரேஷ்பாபு, முத்துசாமி, ஞானராஜ், இமானுவேல் சசிக்குமார், மூர்த்தி, மருதை, இயக்குனர் அம்பேத்கர், செல்வராஜ், நிர்வாகிகள் சீனிவாசன், அரவிந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.பொருளாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ