உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருட்டை மனைவி கண்டித்ததால் கணவர் துாக்கிட்டு தற்கொலை

திருட்டை மனைவி கண்டித்ததால் கணவர் துாக்கிட்டு தற்கொலை

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே திருட்டை மனைவி கண்டித்ததால் கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.உளுந்துார்பேட்டை தாலுகா எ.அத்திப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் முருகன் 40. கூலி தொழிலாளியான இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த பொன்னம்பலத்தின் செல்போனை திருடியுள்ளார். இதனை அறிந்த பொன்னம்பலம், முருகனிடம் கேட்டு பெற்றார். இது குறித்து பொன்னம்பலம், முருகன் மனைவி லதாவிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லதா கணவர் முருகனை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த முருகன், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ