உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் இறந்தவர்கள் குடும்பத்தினரிடம் விசாரணை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் இறந்தவர்கள் குடும்பத்தினரிடம் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டனர்.கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 229 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 67 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் 24 பேரை கைது செய்துள்ளனர்.இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., கோமதி கடந்த 26ம் தேதி விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்று 20க் கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்தது.இதற்காக உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினர்கள் டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு இன்ஸ்பெக்டர் ரேவதி ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனி, தனியாக அழைத்து விசாரித்தார். உயிரிழந்தவருக்கு அரசின் நிவாரணம் வந்து விட்டதா, இறந்த நபருடன் குடித்தவர்கள் யார், மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன் உடலில் ஏற்பட்ட பிரச்னை என்ன, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது அருகில் இருந்தீர்களா? உட்பட பல்வேறு விபரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை