| ADDED : ஜூலை 16, 2024 11:45 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில பணிக்கால ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் வீட்டிலிருந்தே டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம் என, கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.விருத்தாசலம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அப்துல்லத்தீப் செய்திக்குறிப்பு:மத்திய, மாநில அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியர் கள் நேரில் சென்று உயர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது.இதை தவிர்க்கும் விதமாக, அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் 'இந்தியா பேமெண்ட்ஸ் வங்கி' மூலம் ஓய்வூதியர்களின் வீட்டிற்கே சென்று, பயோமெட்ரிக் மற்றும் முக அடையாளம் மூலம் டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஓய்வூதியர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், பி.பி.ஓ., எண் மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விபரங்களை தெரிவித்து, கை விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் ஒரு சில நிமிடங்களிலேயே உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இதற்கு சேவை கட்டணமாக 70 ரூபாயை தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியர்கள் இந்த வசதியை பயன்படுத்தி, உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.