உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கூட்டுறவு ஆராய்ச்சி, வளர்ச்சி கல்வி நிதிக்கு இணை பதிவாளரிடம் காசோலை வழங்கல்

கூட்டுறவு ஆராய்ச்சி, வளர்ச்சி கல்வி நிதிக்கு இணை பதிவாளரிடம் காசோலை வழங்கல்

கள்ளக்குறிச்சி : அ.பாண்டலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் லாப தொகையில் ரூ.4.11 லட்சம் காசோலை கூட்டுறவு சங்க இணைப்பதிவாளரிடம் வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட் டம், அ.பாண்டலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பொதுப்பேரவை கூட்டம் சங்க செயலாட்சியர் வேல்முருகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், 2021-22, 2022-23ம் ஆண்டு இறுதி தணிக்கை அறிக்கை மற்றும் வரவு - செலவு கணக்கு அங்கீகரித்தல் உட்பட பல்வேறு கூட்டப் பொருள்கள் தொடர்பாக ஆலோசனை நடந்தது.இதில், சங்கத்தின் லாப பிரிவினை தொகையில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 293 ரூபாய் கூட்டுறவு ஆராய்ச்சி, வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்விநிதிக்கு வழங்க ஒதுக்கப்பட்டு, அதற்கான காசோலை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசனிடம் வழங்கப்பட்டது.அப்போது கள்ளக்குறிச்சி சரக துணைப்பதிவாளர் சுகந்தலதா, பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் சுரேஷ், சங்கராபுரம் ஒன்றிய கள அலுவலர் வேல்முருகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் நிர்மல், சங்க செயலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை