உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அடிப்படை வசதியின்றி கள்ளக்குறிச்சி நகரம்

அடிப்படை வசதியின்றி கள்ளக்குறிச்சி நகரம்

கள்ளக்குறிச்சி : மாவட்ட தலைநகராக மாறியும் கள்ளக்குறிச்சி நகராட்சியில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படாமல் இருப்பதால் இப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி நகராட்சியில் 21 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். கள்ளக்குறிச்சியில் முக்கிய சாலைகளான சேலம், தியாகதுருகம், சங்கராபுரம், கச்சிராயபாளையம் ஆகியவைகளை மையப்படுத்தியே நகர பெருக்கம் இருந்து வருகிறது.எம்.ஆர்.என்., நகர், திருவரங்கம் நகர், வினாயகா நகர் உள்ளிட்ட பகுதிகள் கழிவுநீர் கால்வாய், குடிநீர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் விரிவாக்கம் பெற்று வருகிறது.கோமுகி ஆற்றங்கரையில் கொட்டப்பட்டு வந்த குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், பசுமை தீர்ப்பாயம் அங்கு குப்பைகள் கொட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டது.இருப்பினும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலேயே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. குப்பைகளை மறுசுழற்சி செய்திட பல கோடி நிதியில் திட்டங்கள் பல செய்யப்பட்டு வந்தாலும், அதனை முறையாக பயன்படுத்தாமல் அதிகாரிகளின் அலட்சியமாக உள்ளனர்.அத்துடன் கழிவுநீர் கால்வாய்கள் பராமரிப்பில்லாததால் ஆங்காங்கே துார்ந்து துர்நாற்றம் வீசுகிறது. அதேபோன்று இங்குள்ள நான்கு சாலைகளும் முழுமையாக விரிவாக்கம் செய்யப்படாமல் பழங்கால அளவீட்டிலேயே இருப்பதுடன், அனைத்து சாலைகளையும் அடைத்துக்கொண்டு வரிசையாக வாகனங்கள் நிறுத்தப்பட்டும் போக்குவரத்து பாதிப்புடன் தொடர்ந்து வருகிறது.மேலும் நகர பகுதியில் நிலவும் போக்குவரத்து சீரமைப்புக்காக அறிவிக்கப்பட்ட 'ரிங் ரோடு' திட்டமும் முடங்கியுள்ளது. மாவட்ட அலுவலக கட்டுமான பணிகளும் எவ்வித முன்னேற்றமும் காணாமல் போனது. மாவட்ட தலைநகராக கள்ளக்குறிச்சி மாறியும் சாலை, குடிநீர், வடிகால் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம், நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போன்றே இப்போது வரை நீடித்து வருவது அரசின் மீது மக்களுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை