உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கூலித் தொழிலாளி சாவு போலீஸ் விசாரணை

கூலித் தொழிலாளி சாவு போலீஸ் விசாரணை

திருக்கோவிலுார் : மணலுார்பேட்டையில் கூலித் தொழிலாளி இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலுார் மாவட்டம், வேப்பூர், நிராமணி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் ஹரிதாஸ், 46; இவர், மணலுார்பேட்டையில் ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான மர சிற்பக் கடையில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் அவர் வேலை செய்யும் கடையிலேயே துாங்கினார். நேற்று காலை 7:30 மணியளவில் பார்த்தபோது, ஹரிதாஸ் இறந்து கிடந்தது தெரியவந்தது.அவரது மகன் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி