உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நுாலக உறுப்பினர் சேர்க்கை விழா

நுாலக உறுப்பினர் சேர்க்கை விழா

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பாச்சேரி கிராமத்தில் உள்ள கஸ்துார்பா பாலிகா பள்ளியில் நுாலக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். பாச்சேரி கஸ்துார்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி சார்பில் பள்ளி தாளாளர் இதயதுல்லா முன்னிலையில் பள்ளி மாணவிகள் 150 பேர் நுாலகத்தில் சந்தா செலுத்தி உறுப்பினர்களாக சேர்ந்தனர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை ரம்யா மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர். நுாலகர் அனுமந்தன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்