உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது

கள்ளக்குறிச்சி : கச்சிராயபாளையம் அருகே சாராயம் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் புதுக்குட்டை பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் நேற்று காலை 11:00 மணியளவில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அப்பகுதியில் கார் டியூப்பில் பதுக்கி வைத்து, சாராயம் விற்ற அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி, 55; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி