உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மினி சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து: 30 பேர் படுகாயம்

மினி சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து: 30 பேர் படுகாயம்

ரிஷிவந்தியம்: அரியலுார் அருகே மினி சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில், 30 பேர் படுகாயமடைந்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் வினோத், 20; இவர், மினி சரக்கு வேனில் நேற்று, அதே பகுதியைச் சேர்ந்த 30 பேருடன் வாணாபுரம் அடுத்த சீர்பாதநல்லுாரில் துக்க நிகழ்வில் பங்கேற்க சென்றார்.வேனை வினோத் ஓட்டிச் சென்றார். காலை 11:00 மணியளவில் அத்தியூர் வனப்பகுதியில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், விபத்தில், கல்பனா, 38; பெரமாத்தா, 50; அருணாசலம், 60; மல்லப்பன், 49; சுகந்தி, 32; சின்னபொண்ணு, 50; பழனியம்மாள், 51; உண்ணாமலை, 40; மல்லிகா, 53; மலர், 37; உட்பட 30 பேரும் படுகாயமடைந்தனர்.காயமடைந்த அனைவரும், கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில் 8 மாத பெண் குழந்தையான தமிழரசன் மகள் சுபிஷா டிரைவருக்கு அருகே இருந்ததால் காயமின்றி தப்பியது.விபத்து குறித்து பகண்டைகூட்ரோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை