உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பாலத்தின் கீழ் இறைச்சி கழிவுகளை கொட்டுவதற்கு பேரூராட்சி தடை விதிப்பு

பாலத்தின் கீழ் இறைச்சி கழிவுகளை கொட்டுவதற்கு பேரூராட்சி தடை விதிப்பு

சங்கராபுரம் : தினமலர் செய்தி எதிரொலியாக சங்கராபுரம் ஆற்றுப் பாலத்தின் கீழ் இறைச்சி கழிவுகளை கொட்ட பேரூராட்சி அதிகாரிகள் தடைவீதித்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் 10 க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. இங்கு குவியும் இறைச்சி கழிவுகளை சங்கராபுரம் ஆற்றுப்பாலத்தின் கீழ் கொட்டப்பட்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. பாலம் வழியாக செல்வோர் பெரிதும் அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்த செய்தி தினமலர் நாளிதழில் வந்தது. இதன் காரணமாக சங்கராபுரம் நகரில் இறைச்சி கழிவுகளை ஆற்றுபாலத்தின் கீழ் கொட்டுவதற்கு பேருராட்சி செயல் அலுவலர்(பொ) ராஜலட்சுமி தடை விதித்தார்.இது சம்பந்தமாக இறைச்சி கடை உரிமையாளர்களிடம் பேரூராட்சி சார்பில் தெரிவித்து மீண்டும் அங்கு கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முதல் கட்டமாக பேரூராட்சி சார்பில் ஆற்றுப்பாலத்தின் கீழ் கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகள் மீது துப்புறவு பணியாளர்கள் பிளிசிங்பவுடர் துாவினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை