உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி ஏ.டி.எஸ்.பி.க்கள் எஸ்.பி.,களாக பதவி உயர்வு 

கள்ளக்குறிச்சி ஏ.டி.எஸ்.பி.க்கள் எஸ்.பி.,களாக பதவி உயர்வு 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 ஏ.டி.எஸ்.பி.,க்கள் எஸ்.பி.,யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 24 ஏ.டி.எஸ்.பி.,க்களுக்கு எஸ்.பி.,யாக பதவி உயர்வு வழங்கி நேற்று கூடுதல் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். அதில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஏ.டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த குத்தாலிங்கம், எஸ்.பி.,யாக பதவி உயர்வு வழங்கப்பட்டு, சென்னை, தி.நகர் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி.,யும், சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., (பொறுப்பு) பணிபுரிந்து வந்த கோமதிக்கும் எஸ்.பி.,யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவர் சென்னை தலைமையிட நிர்வாக பிரிவுக்கு எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்