உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பி.டி.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு

பி.டி.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பி.டி.ஓ., அலகில் பணிபுரியும் 3 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுதும் பி.டி.ஓ., அலகில் பணிபுரியும் 35 பேருக்கு பதவி உயர்வு அளித்து நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பி.டி.ஓ., அலகில் பணிபுரியும் 3 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி, பி.டி.ஓ., வாக பணிபுரிந்த நாராயணசாமி பதவி உயர்வு பெற்று, விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிரிவில் உதவி திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேபோல், பி.டி.ஓ.,வாக பணிபுரிந்த செல்லதுரை அரியலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிரிவில் உதவி திட்ட அலுவலராகவும், பன்னீர்செல்வம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிரிவில் உதவி திட்ட அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை