மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
11 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
11 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
14 hour(s) ago
கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு மாநில பணியாளர் சிக்கன நாணய சங்க ஊழியர் கூட்டமைப் பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சம்பத், துணைத் தலைவர் தாஸ், ராஜேந்திரன், தேவேந்திரன், மகளிரணி செயலாளர் சித்ராதேவி முன்னிலை வகித்தனர். முத்துசாமி வரவேற்றார்.கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு இணையான அடிப்படை சம்பளம், வீட்டு வாடகைபடி, மலைவாழ்படி உள்ளிட்ட பணப்பலன்கள் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு கிடைத்திடும் வகையில் ஊதிய ஆணை வழங்க வேண்டும்.பணியில் சேர்ந்து 10 ஆண்டு முடித்தவர்களுக்கு தேர்வு நிலையும், 20 ஆண்டு முடித்தவர்களுக்கு சிறப்பு நிலையும் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட பொருளா ளர் கண்ணன் நன்றி கூறினார்.
11 hour(s) ago
11 hour(s) ago
14 hour(s) ago