உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தனிப்பிரிவு போலீசார் மாற்றம் கள்ளக்குறிச்சி எஸ்.பி., அதிரடி

தனிப்பிரிவு போலீசார் மாற்றம் கள்ளக்குறிச்சி எஸ்.பி., அதிரடி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த 6 போலீசார் தனிப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி சட்டம், ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், கரியாலுார் தனிப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். தலைமை காவலர்களான எடைக்கல் இளைந்திரையன் சங்கராபுரம் தனிப்பிரிவுக்கும், உளுந்துார்பேட்டை மனோகரன் சின்னசேலம் தனிப்பிரிவுக்கும், வரஞ்சரம் சிவமுருகன் கச்சிராயபாளையம் தனிப்பிரிவுக்கும், சின்னசேலம் சீனுவாசன் கள்ளக்குறிச்சி தனிப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், கீழ்குப்பத்தில் பணிபுரிந்த ராமதாஸ் அதே ஸ்டேஷனில் தனிப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். மாவட்டத்தில் 6 தனிப்பிரிவு போலீசார்களை மாற்றி எஸ்.பி., ரஜத்சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி