உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாநில அளவிலான சிலம்பம் போட்டி; மூங்கில்துறைப்பட்டு மாணவர்கள் சாதனை

மாநில அளவிலான சிலம்பம் போட்டி; மூங்கில்துறைப்பட்டு மாணவர்கள் சாதனை

மூங்கில்துறைப்பட்டு : மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் மூங்கில்துறைப்பட்டு மாணவர்கள் முதல் மூன்று பரிசுகளை வென்று சாதனைப் படைத்துள்ளனர்திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் மூங்கில்துறைப்பட்டை சேர்ந்த நான்கு மாணவர்கள் முதல் மூன்று இடத்தை பெற்றனர்.மாணவி ஜனனி முதல் பரிசு மற்றும் 10 கிராம் வெள்ளி நாணயமும், ஆல்வின்,யோகப்பிரியன்இரண்டாம் இடம் பெற்று 9 கிராம் வெள்ளி நாணயமும்.மோனிகா மூன்றாம் இடம் பெற்று ஆறு கிராம் வெள்ளி நாணயமும் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்கள் தேசிய அளவிலான சிலம்பம் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.இவர்களுக்கு மூங்கில்துறைப்பட்டில் பாராட்டு விழா நடந்தது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சியாளர்கள் ஐயப்பன், சக்திவேல், அண்ணாமலை, ஜான் வின்சென்ட் ராஜ், விக்கி ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை