உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டேங்க் ஆப்ரேட்டர் ஆர்ப்பாட்டம்

டேங்க் ஆப்ரேட்டர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி ஓ.எச்.டி., ஆப்ரோட்டர், துாய்மை பணியாளர் மற்றும் துாய்மை காவலர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். குறைந்தபட்ச கூலி சட்டத்தின் படி ஓ.எச்.டி., ஆப்ரேட்டர்களுக்கு ரூ.14,593, துப்புரவு பணியாளர், துாய்மை காவலருக்கு ரூ.12,593 மாத ஊதியமாக வழங்குதல், ஓய்வூதியம் மற்றும் சர்வீஸ் தொகை வழங்குதல், தமிழக அரசின் தடை ஆணையை ரத்து செய்து, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.ஒரு மாத ஊதியத்தை பொங்கல் கருணை தொகையாக வழங்குதல், ஒரு முறை தொட்டியை சுத்தம் செய்ய ரூ.1,000 செலவின தொகையாக வழங்குதல், துாய்மை காவலர்களுக்கு ஊராட்சி நிதியில் இருந்து ஊதியம் வழங்குதல், குப்பை வண்டியை பழுது நீக்கம் செய்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை