உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளச்சாராய விவகாரம் கேட்டறிந்த முதல்வர்

கள்ளச்சாராய விவகாரம் கேட்டறிந்த முதல்வர்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் முதல்வர் ரங்கசாமி கேட்டறிந்தார்.கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 168 பேர் பாதிக்கப்பட்டதில், 54 பேர் இறந்தனர். 114 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்த 19ம் தேதி இரவு கள்ளக்குறிச்சியில் இருந்து 20 பேர் கொண்டுவரப்பட்டு ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மூன்று பேர் இறந்தனர். ஒன்பது பேர் கவலைக்கிடம் உள்பட 17 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.இந்நிலையில் அன்று இரவு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கள்ளச்சாராய சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் மூலம் கேள்விப்பட்டு, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், மருத்துவமனை வளாகத்தில் எவ்வித பதட்டமும் ஏற்படாமல் கண்காணிப்பில் இருக்கவும் அறிவுறுத்தினார்.அதையொட்டி வடக்கு எஸ்.பி., வீரவல்லவன், சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் மருத்துவமனையில் உள்ளவர்களை பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை