உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது

உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே திரவுபதி அம்மன் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் அடுத்த தொட்டியம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் பூசாரி கடந்த 22ம் தேதி காலை 6:00 மணியளவில் கோவிலுக்கு சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் திருடு போனது தெரியவந்தது.இந்நிலையில், நேற்று காலை சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் அம்மையகரம் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை நிறுத்தி விசாரித்ததில், சேலம் மாவட்டம், மன்னாய்க்கன்பட்டியைச் சேர்ந்த செல்லன் மகன் குட்டிஸ், 24; என்பதும், தொட்டியம் திரவுபதி அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து காணிக்கை திருடிய நபர் என்பதும் தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ