உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

கள்ளக்குறிச்சி: தென்கீரனுாரில் பாம்பு கையில் ஏறியதால் பயத்தில் பனை மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த பிரிதிவிமங்களத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன், 45; நுங்கு, இளநீர் வியாபாரி. நேற்று முன்தினம் காலை தென்கீரனுார் கிராமத்திற்கு சென்று, பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டினார்.அப்போது மரத்தில் இருந்த பாம்பு அவரது கையில் ஏறியது. இதனால் பயத்தில் பச்சையப்பன் கையை உதறியதால், மரத்தில் இருந்து கீழே விழுந்தார்.படுகாயம் அடைந்த அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் அன்று இரவு பச்சையப்பன் இறந்தார்.புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை