உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு பஸ் டிரைவரிடம் தகராறு செய்தவர் கைது

அரசு பஸ் டிரைவரிடம் தகராறு செய்தவர் கைது

திருக்கோவிலுார், :' மணலுார்பேட்டையில் அரசு பஸ் டிரைவரிடம் தகராறு செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.அரசு போக்குவரத்துக் கழக திருக்கோவிலுார் பணிமனையில் டிரைவராக இருப்பவர் ஜோசப் ஸ்டாலின், 52; நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் டவுன் பஸ் தடம் எண்.டி 4 பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கண்டியாங்குப்பம் சென்று திருக்கோவிலுார் திரும்பினார்.மணலுார்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது, சாலையில் நின்றிருந்த நபர், பஸ்சை மறித்து, என்மீது மோதுவது போல் வருகிறாயா என கேட்டு ஜோசப் ஸ்டாலினிடம் தகராறு செய்து தாக்கினார்.இதுகுறித்து ஜோசப் ஸ்டாலின் அளித்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து டிரைவரிடம் தகராறு செய்த அரகண்டநல்லுாரைச் சேர்ந்த மூர்த்தி மகன் விக்னேஷ், 28; என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை